வங்கதேசத்தில், அவாமி லீக் கட்சியின் தலைமையிலான முந்தைய ஆட்சியின் போது அறிவிக்கப்பட்ட எட்டு தேசிய தினங்கள் ரத்து செய்யப்படுவதாக இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
விடுதலைப் போருக்கு தலைமை தாங்கிய முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபூர் ரஹ்மானின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையைக் குறிக்கும் மார்ச் 7, அவரது பிறந்த நாள், குழந்தைகள் தினமாகும் ஆகஸ்ட் 5, மற்றும் அவர் படுகொலை செய்யப்பட்ட ஆகஸ்ட் 15 ஆகிய தினங்கள், தேசிய நினைவு தினங்கள் என அறிவிக்கப்பட்டிருந்தன. இப்போது, அந்த நினைவு தினங்கள் இனி கடைப்பிடிக்கப்படாது என இடைக்கால அரசின் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.














