தமிழகத்தில் 73 கோடி கிலோ நிலக்கரி இறக்குமதி - மின் வாரியம்

December 15, 2022

தமிழக மின் வாரியத்திற்கு 73 கோடி கிலோ நிலக்கரி இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய மாநில மின் வாரியங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, தமிழக மின் வாரியம் இந்தாண்டு மார்ச்சில் 48 கோடி கிலோ நிலக்கரி வாங்க 'டெண்டர்' கோரியதில் இரு நிறுவனங்கள் தேர்வாகின. இரு நிறுவனங்களிடம் இருந்து மின் வாரியம் 1 டன் நிலக்கரியை ரூ.10, 200 முதல் ரூ.10,400 வரை வாங்கியது. வரும் கோடை […]

தமிழக மின் வாரியத்திற்கு 73 கோடி கிலோ நிலக்கரி இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய மாநில மின் வாரியங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, தமிழக மின் வாரியம் இந்தாண்டு மார்ச்சில் 48 கோடி கிலோ நிலக்கரி வாங்க 'டெண்டர்' கோரியதில் இரு நிறுவனங்கள் தேர்வாகின. இரு நிறுவனங்களிடம் இருந்து மின் வாரியம் 1 டன் நிலக்கரியை ரூ.10, 200 முதல் ரூ.10,400 வரை வாங்கியது.

வரும் கோடை மின் தேவையை சமாளிக்க 73 கோடி கிலோ நிலக்கரி வாங்க இந்தாண்டு செப்டம்பரில் டெண்டர் கோரப்பட்டது. அதில், ஏழு நிறுவனங்கள் பங்கேற்றன. அவற்றில் தேர்வான நான்கு நிறுவனங்கள் வழங்கிய விலை புள்ளி திறக்கப்பட்டது. அதில் 1,000 கிலோ நிலக்கரி 134 டாலர் என குறைந்த விலை குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மின் வாரியம் 1,000 கிலோ நிலக்கரியை ரூ.10,988 – ரூ.11,000க்கு வாங்க முடிவு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu