இந்தியாவின் பிப்ரவரி மாத சமையல் எண்ணெய் இறக்குமதி 1098475 டன் அளவில் பதிவாகியுள்ளது. இது கடந்த 2022 பிப்ரவரி மாத இறக்குமதியை விட 12% உயர்வாகும். இந்திய செக்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2022 பிப்ரவரியில், இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 983603 டன் அளவில் பதிவாகி இருந்தது. மேலும், உணவு அல்லாத எண்ணெய் இறக்குமதி 36389 டன் அளவில் பதிவாகி இருந்தது. தற்போது, கடந்த மாத உணவு அல்லாத எண்ணெய் இறக்குமதி 16006 டன் ஆக குறைந்துள்ளது. அதே வேளையில், தாவர எண்ணெய்களின் மொத்த இறக்குமதி 9% உயர்ந்து, 1114481 டன் அளவில் பதிவாகியுள்ளது. மேலும், கடந்த நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி 5844765 டன் அளவில் பதிவாகியுள்ளது.