இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.எம்.எஸ் இம்பால் போர்க்கப்பல் திறன் குறித்து பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஐ.எம்.எஸ் இம்பால் போர்க்கப்பல் உலகின் நவீன கப்பல்களில் ஒன்றாகும். இது 174 மீட்டர் நீளம்,i 7400 டன் எடை கொண்டது ஆகும். மேலும் இது மணிக்கு சுமார் 56 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க கூடியது. இதன் மூலம் தரையில் இருந்து தரைக்கு செல்லும் ஏவுகணைகளை செலுத்த முடியும். இந்த வருட இறுதியிலோ அல்லது 2024 இன் தொடக்கத்திலோ இந்த கப்பலை நாட்டிற்கு அர்பணிக்க இந்திய கப்பற்படை திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கப்பல்களின் திறன் குறித்து பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றான பிரமோஸ் ஏவுகணை செலுத்தும் பரிசோதனை முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இந்திய கடற்படையின் மேற்கு பகுதி ஆணையம் தெரிவித்துள்ளது.