தமிழகத்தில் நேற்று 14 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்தது.
தமிழகம் முழுவதும் நேற்று அதிகபட்சமான வெயில் கொளுத்தியது. அதில் 14 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்தது.குறிப்பாக ஈரோட்டில் அதிகபட்சமாக 107 டிகிரி, சென்னையில் 101 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கை உடன் இருக்குமாறும், அதிக அளவில் தண்ணீர் பருகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அதே வேளையில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட இந்த ஆண்டு இரண்டு முதல் ஐந்து டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.