இந்தியாவில் 5 வகை பாக்டீரியாவால் 6.8 லட்சம் பேர் உயிரிழப்பு - லான்செட் ஆய்வு 

November 23, 2022

இந்தியாவில் 2019-ம் ஆண்டில் 5 வகை பாக்டீரியாவால் 6.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக லான்செட் ஆய்வு கூறுகிறது. இது குறித்து தி லான்செட் என்ற மருத்துவ இதழில் ஒரு ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. அதில், கடந்த 2019-ம் ஆண்டில் சர்வதேச அளவில் இஸ்கெமிக் இதய நோய்க்கு அடுத்தபடியாக மனித உயிரிழப்புக்கு பாக்டீரியா தொற்று முக்கிய காரணமாக இருந்துள்ளது. இந்தியாவில் 2019-ல் இ-கோலி, எஸ். நுமோனியா, கே. நிம்மோனியா, எஸ். அவ்ரூஸ் மற்றும் ஏ. பவ்மானி ஆகிய 5 […]

இந்தியாவில் 2019-ம் ஆண்டில் 5 வகை பாக்டீரியாவால் 6.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக லான்செட் ஆய்வு கூறுகிறது.

இது குறித்து தி லான்செட் என்ற மருத்துவ இதழில் ஒரு ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. அதில், கடந்த 2019-ம் ஆண்டில் சர்வதேச அளவில் இஸ்கெமிக் இதய நோய்க்கு அடுத்தபடியாக மனித உயிரிழப்புக்கு பாக்டீரியா தொற்று முக்கிய காரணமாக இருந்துள்ளது. இந்தியாவில் 2019-ல் இ-கோலி, எஸ். நுமோனியா, கே. நிம்மோனியா, எஸ். அவ்ரூஸ் மற்றும் ஏ. பவ்மானி ஆகிய 5 கொடிய பாக்டீரியாவால் 6 லட்சத்து 78 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக இ-கோலி பாக்டீரியாவால் மட்டும் 1.57 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

எனவே, பாக்டீரியா தொற்று மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த சுகாதார கட்டமைப்பை பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, நோய்களைக் கண்டறியும் ஆய்வகங்களை அதிகப்படுத்துவது, தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu