முதல் முறையாக, வெளியீட்டு நாள் அன்றே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 வெளியிடப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
சர்வதேச அளவில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், உலகின் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 15 முதல் நாளே அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஐபோன் 15 கைபேசியின் பெரும்பான்மை அளவு சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எனினும், முதல் முறையாக, இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட கைபேசி முதல் நாளே அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது, ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி துறை, சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றம் செய்யப்படுவதை பிரதிபலிப்பாக இருக்கும் என பேசப்படுகிறது. விரைவில் நடைபெறவிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் வொண்டர்லஸ்ட் நிகழ்வில், ஐபோன் 15 வெளியீடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.