நாசா, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 4k தரத்திலான வீடியோவை ஸ்ட்ரீமிங் செய்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.4K வீடியோ செயற்கைக்கோள் மற்றும் நாசாவின் கண்காணிப்பு மற்றும் தரவு பரிமாற்ற செயற்கைக்கோள் அமைப்பு (TDRSS) வழியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நாசா, ஒரு விமானத்தில் இருந்து சர்வதேச விமான நிலையத்துக்கு 4k வீடியோவை அனுப்பியது. இந்த முயற்சி முழுமையான வெற்றி அடைந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இது நாசாவின் அதிவேக தரவு பரிமாற்ற திறன்களை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் விண்வெளியில் இருந்து உயர்தர வீடியோ பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு ஆரம்ப புள்ளியாக அமைந்துள்ளது.