தமிழகத்திற்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதால் என். ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் இருந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஜவுளிக்கடை, தனியார் தொழிற்சாலை, டீக்கடை ஆகிய அனைத்து துறைகளிலும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் இவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர். இவர்களுக்கான தனி அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்து எழுப்பப்பட்டு வருகிறது.தற்போது வங்கதேச பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் வடமாநில தொழிலாளர்கள் என கூறி ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலின் படி நாடும் முழுவதும் என். ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சென்னையில் உள்ள மறைமலைநகர், பள்ளிக்கரணை படப்பை ஆகிய மூன்று இடங்கள் நடத்திய சோதனையில் இதுவரை 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர்கள் இந்தியாவிற்குள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்தப்பட போலி ஆவணங்களை தயார் செய்து அல்லது கொத்தடிமைகள் போல விற்பனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து என். ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.