பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பந்தத்தில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகள் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது.
பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேர் சென்னை திருவல்லிக்கேணியில் தங்கி இருந்து சதி திட்டம் தீட்டியதாக போலீசார் தெரியவந்தது இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தி வந்தனர். மேலும் குற்றவாளிகள் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து 1000 கண்காணிப்பு கேமராக்கள் ஆராய்ந்தனர். மேலும் அவர்கள் யார் யாருடன் தொடர்புகள் இருந்தார்கள் என்பது குறித்த ரகசிய தகவல்களை திரட்டி வருகின்றனர் இதன் அடிப்படையில் இன்று சென்னை உட்பட ஐந்து இடங்களில் என். ஐ. ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உதவி செய்தவர்களை பிடிக்கும் நோக்கத்திலேயே இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.