கடந்த மே மாதத்தில், இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. இந்திய தேசிய கட்டணங்கள் கழகம் (NPCI) இந்த தகவலை தெரிவித்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்தியா மிகப்பெரிய மைல் கல்லை எட்டி உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதத்தில், 9 பில்லியன் பரிவர்த்தனைகள் யுபிஐ தளங்கள் மூலமாக நடைபெற்றுள்ளன. வருடாந்திர அடிப்படையில் இது 58% உயர்வாகும். மேலும், மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு 14.89 லட்சம் கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 43% உயர்வாகும். மேலும், “இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. மார்ச் மாதத்தில் 8.68 பில்லியன், ஏப்ரல் மாதத்தில் 8.89 பில்லியன் அளவில் யுபிஐ பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 2027 ஆம் நிதி ஆண்டில் 90% கட்டணங்கள் யுபிஐ மூலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என கூறப்பட்டுள்ளது.














