நெய்வேலியில் என்.எல்.சி-க்கு நிலம் வழங்கினால் இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை வழங்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெய்வேலியில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கொடுப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு, அதற்கான பயிற்சி அளிப்பது மற்றும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், வேலையில் சேர விரும்பத்தவர்களுக்கு மாதாந்திர உதவி தொகையாக ரூ.7,000 முதல் ரூ.10,000 வரையும், மேலும் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்கள், என்.எல்.சி. சுரங்கத்திற்கு 2006-ல் நிலம் எடுத்த போது வேலைவாய்ப்பு மற்றும் ஏக்கருக்கு ரூ.6 லட்சம் தருவதாக கூறிவிட்டு இதுவரை நிறைவேற்றவில்லை என புகார் தெரிவித்தனர். எனவே இப்போது அறிவித்துள்ள பணபலன் போதுமானது அல்ல என தெரிவித்துள்ள கிராம மக்கள் ஏக்கருக்கு ரூ.50 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.