மக்கள்தொகை குறைவுக்கு பதிலடி – ரஷியாவில் கர்ப்பமான பள்ளி மாணவிக்கு ரூ.1 லட்சம் ஊதியம்

July 7, 2025

மக்கள்தொகை குறைவைக் கட்டுப்படுத்த, ரஷியாவில் இளம் வயதில் கர்ப்பமாகும் மாணவிகளுக்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது. மக்கள்தொகை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ரஷியா, 10 மாகாணங்களில் புதிய முயற்சியாக, கர்ப்பமான பள்ளி மாணவியருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு சமமான தொகையை வழங்க முடிவெடுத்துள்ளது. இதற்கு முன் நடைமுறையில் இருந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் திட்டம், இளைய பெண்களுக்கு பலனளிக்காததால், தற்போது அவர்கள் வரம்பிலும் இது கொண்டுவரப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.41 ஆக குறைந்துள்ளதுதான் […]

மக்கள்தொகை குறைவைக் கட்டுப்படுத்த, ரஷியாவில் இளம் வயதில் கர்ப்பமாகும் மாணவிகளுக்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது.

மக்கள்தொகை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ரஷியா, 10 மாகாணங்களில் புதிய முயற்சியாக, கர்ப்பமான பள்ளி மாணவியருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு சமமான தொகையை வழங்க முடிவெடுத்துள்ளது. இதற்கு முன் நடைமுறையில் இருந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் திட்டம், இளைய பெண்களுக்கு பலனளிக்காததால், தற்போது அவர்கள் வரம்பிலும் இது கொண்டுவரப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.41 ஆக குறைந்துள்ளதுதான் இதற்கான முக்கிய காரணமாகும். இதேசமயம், உக்ரைனுடன் நடந்த போரில் 2.5 லட்சம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும், பல இளம் ரஷியர்கள் நாட்டை விட்டு புறப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. புதிய திட்டத்திற்கு 43% பேர் ஆதரவும், 40% பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். 2050க்குள் உலகின் 75% நாடுகள் இதே பிரச்சனையை எதிர்கொள்ளும் என்ற முன்னறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu