தமிழகத்தில் 1½ லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வில் 86 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 14-ந் தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த ஆசிரியர் தகுதி தேர்வில் மொத்தம் 1,53,233 தேர்வர்கள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த 2-ந்தேதி அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 21, 543 பேர் தகுதி பெற்றுள்ளனர். மீதமுள்ள 86 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1ல் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சான்றிதழை நேற்று முதல் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள். 3 மாதங்கள் வரை சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.














