தமிழகத்தில் 2025-26 ஆண்டுக்கான பட்ஜெட்டின் தயாரிப்பு பணிகள் தீவிரம்

இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூடியது. 2021-ம் ஆண்டு மே மாதத்தில் தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் தொடங்கியுள்ளன. இப்போது, பட்ஜெட்டை இறுதி செய்யும் பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 14-ம் தேதி தாக்கல் […]

இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூடியது.

2021-ம் ஆண்டு மே மாதத்தில் தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் தொடங்கியுள்ளன. இப்போது, பட்ஜெட்டை இறுதி செய்யும் பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார். அதன்பின், மார்ச் 15-ம் தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசின் அமைச்சரவை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடியது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. மேலும், மாநில உரிமைகள் தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu