வங்கி கடன் மோசடி வழக்கில் டி. எச்.எஃப்.எல் நிறுவனர் கைது

டி. எச்.எஃப்.எல் நிறுவன இயக்குனர் தீரஜ் வதாவன் ரூபாய் 34,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் தீரஜ் வதாவன் மீது சிபிஐ வங்கி மோசடி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. இவர் 17 வங்கிகளில் 34,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்டு வரும் டி. எச்.எஃப்.எல் வழக்கை சிபிஐ பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது […]

டி. எச்.எஃப்.எல் நிறுவன இயக்குனர் தீரஜ் வதாவன் ரூபாய் 34,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் தீரஜ் வதாவன் மீது சிபிஐ வங்கி மோசடி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. இவர் 17 வங்கிகளில் 34,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்டு வரும் டி. எச்.எஃப்.எல் வழக்கை சிபிஐ பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி கடன் மோசடி ஆகும். ஏற்கனவே எஸ் வங்கியின் மோசடி வழக்கில் ஈடுபட்டிருந்து ஜாமினில் வெளியே வந்த தீரஜ் வதாவனை மீண்டும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதில் மே 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu