பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது.
பழனி முருகன் கோவிலில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், கோவிலுக்கு வந்த பக்தர்கள் செலுத்திய பணம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் அடங்கிய காணிக்கை ரூ. 3.31 கோடி வரை உயர்ந்தது. இதில் 557 கிராம் தங்கம் மற்றும் 21 கிலோ வெள்ளி கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், பழனி பகுதி வங்கி அலுவலர்கள், கலைக்கல்லூரி பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பணியாற்றினர்.