மேற்கு வங்காளத்தில் 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு வழங்கப்பட்ட அனைத்து ஓபிசி சான்றிதழ்களையும் ரத்து செய்ய கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா நீதிமன்றம் மேற்கு வங்காளத்தில் 2010க்கு பின்னான ஓபிசி சான்றிதழ்களுக்கு ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டம் 1993 படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியலை மேற்கு வங்காள கமிஷன் தயாரிக்கும். அதன்படி 2010 ஆம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ் அப்படியே இருக்கும். அதற்கு பின்னான ஓபிசி பரிந்துரைகள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் 2010 ஆம் ஆண்டு வழங்கிய சான்றிதழ்கள் மூலம் இட ஒதுக்கீடு பெற்றிருந்தால் அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவர்களுடைய வேலையை பாதிக்காது என்றும் மேற்கு வங்காள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை ஏற்க முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு முன் ஆசிரியர்கள் செல்லாது என மேற்கு வங்காள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது














