' சென்னை சங்கமம் ' விழா துவக்கம்

January 14, 2023

'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சியை முதல்வர் தொடங்கி வைத்தார். தமிழக அரசு சார்பில் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் சென்னை தீவுத் திடலில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், பழங்குடியினர் பாட்டு, நாட்டுப்புற பாட்டு உள்ளிட்டவை இடம்பெற்றன. அப்போது அவர் பேசுகையில், சென்னை மட்டுமின்றி கலை, பண்பாட்டு தலைநகரங்களான காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களில் நம்ம ஊரு திருவிழா […]

'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சியை முதல்வர் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு சார்பில் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் சென்னை தீவுத் திடலில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், பழங்குடியினர் பாட்டு, நாட்டுப்புற பாட்டு உள்ளிட்டவை இடம்பெற்றன. அப்போது அவர் பேசுகையில், சென்னை மட்டுமின்றி கலை, பண்பாட்டு தலைநகரங்களான காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களில் நம்ம ஊரு திருவிழா நடத்த 9.84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 18 இடங்களில் 17ம் தேதி வரை 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' நடத்தப்பட உள்ளது. இதில் 40 கலை வடிவங்களை 1,000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நிகழ்த்த உள்ளனர். இதில் பங்கேற்கும் கலைஞர்களுக்கான ஒருநாள் மதிப்பூதியம் 2,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu