தி.நகரில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான ஆகாய நடைபாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
சென்னையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாக விளங்கும் தி.நகரில் நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக, மாம்பலம் ரயில் நிலையம் வரை 13 அடி அகலத்தில் 1,968 அடி நீளத்திற்கு நடை மேம்பாலம் அமைக்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.30 கோடி செலவில் திட்டமிடப்பட்டது. ஆனால் 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக பணிகளில் சற்று சுணக்கம் ஏற்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.














