மோடி மற்றும் பெட்ரோ சான்செஸ் இணைந்து டாடா சி-295 விமான ஆலையை குஜராத்தில் திறந்து வைத்துள்ளனர்.
குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் (டி.ஏ.எஸ்.எல்) நிறுவனத்தின் புதிய வளாகம், பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோரால் இன்று திறக்கப்பட்டது. இந்த தொழிலகம், இந்திய ராணுவத்திற்கான சி-295 ரக விமானங்களை தயாரிக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது, இது இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தியில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.இந்த திட்டத்தில், இந்தியா, ஏர்பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து மொத்தம் 56 சி-295 விமானங்களை வாங்க உள்ளது. இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்படுவதுடன், 40 விமானங்கள் இந்தியாவில் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்படவுள்ளது.இந்த ஆலை, ராணுவ விமானங்களை தயாரிக்க இருக்கும் முதல் தனியார் வளாகமாக இருக்கும்.














