அடுத்தாண்டு ஜனவரியில் அயோத்தியில் ராமர் கோயில் திறப்புவிழா - உ.பி. முதல்வர் யோகி 

அயோத்தியில் ராமர் கோயில் திறப்புவிழா அடுத்தாண்டு ஜனவரியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் 9-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அயோத்தியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசுகையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்தாண்டு ஜனவரியில் திறக்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு அயோத்தி கோயில் அறக்கட்டளை […]

அயோத்தியில் ராமர் கோயில் திறப்புவிழா அடுத்தாண்டு ஜனவரியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் 9-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அயோத்தியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசுகையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்தாண்டு ஜனவரியில் திறக்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு அயோத்தி கோயில் அறக்கட்டளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி அனுமதி பிரதமர் அலுவலகத்தில் இருந்து இன்னும் வரவில்லை. அடுத்த 4 முதல் 6 மாதங்களில், அயோத்தி சாலைகள், டெல்லி ராஜபாதையுடன் ஒப்பிடும் வகையில் இருக்கும். அவற்றுக்கு நாம் ராமர் பாதை என பெயரிட்டுள்ளோம். ராம் ஜென்மபூமியை நோக்கிச் செல்லும் சாலைக்கு பக்தி சாலை என பெயரிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu