இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவத்தின் பாக்லோ பயிற்சி மையத்தில், செங்குத்தான காற்று சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை ராணுவ தளபதி மனோஜ் பாண்டே காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
வான்வழி தாக்குதல் நடத்தப்படும் போது, ராணுவ வீரர்கள் பாராசூட் மூலமாக குதித்து செயல்பட வேண்டும். அதற்கான பயிற்சிகளை மேம்படுத்துவதற்கு இந்த காற்று சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த காற்று சுரங்க பாதையில், நிஜமாக பறந்து செல்லும் உணர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, வான்வழி தாக்குதலின் போது, சரியான மதிப்பீடுகளை கணிப்பதற்கு இங்கு கொடுக்கப்படும் பயிற்சிகள் துணை புரியும் என கருதப்படுகிறது. இந்திய ராணுவத்தின் வலிமையை இது பன்மடங்கு அதிகப்படுத்தும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.