தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கான ஊக்கப் பரிசு வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
தமிழக வெற்றி கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கான ஊக்கப்பரிசு வழங்கும் விழா இன்று திருவான்மையூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக 800க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசை வழங்கினார். இந்த விழா இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது