தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு 2022- 2023 ஆம் ஆண்டுக்கான அரவை பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 253.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றிற்கு 3016.25 ரூபாய் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 11.45 லட்சம் கரும்பு விவசாயிகள் பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.