யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் குஜராத்தின் பாரம்பரியமான கர்பா நடனத்தை இணைத்து யுனெஸ்கோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குஜராத்தில் நவராத்திரி விழாவின்போது பெண்ணின் தெய்வீக வடிவமான துர்கா தேவியை வைத்து கர்பா பாடல்கள் இசைக்கப்படும். இதற்கு ஏற்ப கர்பா நடனத்தை பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும், பெண்களும் ஆடுவார்கள். இந்த நடனத்தை இந்தியா மட்டும் இன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். குறிப்பாக வட மாநிலங்கள் பலவற்றில் கர்பா நடனம் ஆடப்பட்டாலும் குஜராத்தில் கர்பா நடனம் மிகவும் புகழ்பெற்றது. இதற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்க கோரி மத்திய அரசு யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்தது. இதில் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளை பாதுகாக்கும் யுனெஸ்கோவின் சர்வதேச குழுவின் மாநாடு நடைபெற்றது. இதில் குஜராத்தின் பாரம்பரிய நடனம் ஆன கர்பா நடனத்தை கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.