வருமான வரித்துறையினர் அதிரடியாக அமைச்சர் ஏ. வ வேலுவுக்கு சொந்தமான இரண்டு இடங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஏ. வ வேலுவுக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மூன்றாம் தேதி முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும் இவருக்கு நெருக்கமான திமுக பிரமுகர்களின் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் திருவண்ணாமலை அருணை கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மூன்று அறைகளை பூட்டி சீல் வைத்தனர். மேலும் 80 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். அருணி மருத்துவக் கல்லூரியில் கடந்த முறை சோதனை நடத்தி சீல் வைக்கப்பட்ட மூன்று அறைகளிலும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தவிர செங்கல்பட்டில் உள்ள தொழில் அதிபர் ராஜ் பிரகாஷ் என்ற ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்துகின்றன.