தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, தூத்துக்குடியை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு, இந்தியாவின் 21 மாநிலங்களில் 546 கிளைகள் உள்ளன. இந்நிலையில், இன்று காலை முதல், வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள வி இ சாலையில், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் மற்றும் அதன் இணை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த 2 அலுவலகங்களிலும் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனைக்கான காரணம் வெளியிடப்படவில்லை. இந்த செய்தி, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.