சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கே.கே நகரில் வசித்துவரும் ஜவுளி நிறுவன தொழிலதிபர் நீலகண்டன் மற்றும் அவருக்கு சொந்தமான வீடு, ஜவுளி நிறுவனங்கள் ஆகியவற்றில் இன்று வருமானவரி துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பெங்களூர், கொச்சின் உள்ளிட்ட இடங்களிலும் நீலகண்டன் ஜவுளி தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர் முறையான வருமான வரி கட்டவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால் ஜவுளி நிறுவனம் முறையான வரி கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதேபோன்று தி.நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான பிரகாஷ், தினேஷ், நாகேஷ் ஆகியிருக்கு சொந்தமான இடங்களான நுங்கம்பாக்கம், வெப்பேரி, கோபாலபுரம், பட்டாளம் ஆகிய இடங்களிலும் திடீர் சோதனை நடைபெற்று வருகிறது.