சென்னை மற்றும்
திருவண்ணாமலையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை சென்னை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், கரூர் ஆகிய ஊர்களில் சுமார் 80 இடங்களில் நடைபெறுகிறது.
அமைச்சர் எ.வ.வேலு மீது எழுந்த வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் வருமானவரித் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் அலுவலகங்கள், வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் சுமார் 80 இடங்களில் சோதனை நடைபெறுவதாக வருமானவரித் துறையினர் தெரிவித்தனர்