பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணம் 50 சதவீதம் உயர்வு

October 19, 2023

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணம் அதிகமாக உயர்ந்துள்ளது. பண்டிகை விடுமுறை காலங்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் சுற்றுலா செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான திட்டத்தை பயணிகள் முன்கூட்டியே செய்கின்றனர். சுற்றுலா முகவர்கள் இதனை ஐ ஆர் சி டி சி மூலம் சுற்றுலா தளங்களுக்கு முன்பதிவு செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் அடுத்த மாதம் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. அதனால் 10 முதல் 16ஆம் தேதி […]

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணம் அதிகமாக உயர்ந்துள்ளது.

பண்டிகை விடுமுறை காலங்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் சுற்றுலா செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான திட்டத்தை பயணிகள் முன்கூட்டியே செய்கின்றனர். சுற்றுலா முகவர்கள் இதனை ஐ ஆர் சி டி சி மூலம் சுற்றுலா தளங்களுக்கு முன்பதிவு செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் அடுத்த மாதம் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. அதனால் 10 முதல் 16ஆம் தேதி வரை உள்நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இருந்தது விட அதிகமாக உள்ளது. குறிப்பாக பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, ராஜஸ்தான், காஷ்மீர், கோவா உள்ளிட்ட நகரங்களில் விமான கட்டணம் அதிகரித்துள்ளது. மேலும் டிக்கெட் அனைத்தும் நிரம்பி விட்டன. இது குறித்து ஏஜென்சி இயக்குனர் ஒருவர் கூறியதில், இந்தியாவிற்குள் உள்ள நகரங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விமான பயணம் அதிகரித்துள்ளது. தீபாவளி, கிறிஸ்மஸ், புத்தாண்டு ஆகிய விடுமுறைகளை கொண்டாடுவதற்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ற அளவு இருக்கைகள் இல்லை. மேலும் ஹோட்டல்களில் அறைகளும் நிரம்பி விட்டன. தேவைகள் அதிகமாக இருப்பதால் கட்டணம் உயர்ந்துள்ளது. புத்தாண்டு வரை விமானங்களில் பயணிக்க கட்டணம் அதிகமாக இருக்கும் என கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu