பள்ளிக்கரணை மற்றும் பெரும்பாக்கம் ஆகிய ஏரிகளில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக நீர் நிறைந்து காணப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து வரும் வலசை பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து பள்ளிக்கரணை ஏரிகளில் அதிகரித்து வருகிறது. இந்த ஏரிகளில் பல்வேறு வகையான பறவைகள் முகாமிட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பார்வையிட வந்து செல்கின்றனர். இதில் சாம்பல் கூழைக்கடா, அரிவாள் மூக்கன் ஆகிய இரண்டு இன பறவைகள் பள்ளிக்கரணை ஏரியில் கூடு கட்ட தொடங்கியுள்ளது.இதே போல் பெரும்பாக்கம் ஏரிக்கும் ஏராளமான பறவைகள், பல வகை வாத்துக்கள் வந்து முகாமிட்டுள்ளன.மேலும் சைபிரியாவில் இருந்து நான்கு வகையான வாத்துக்கள் பள்ளிக்கரணை ஏரி பகுதிக்கு வந்துள்ளன என ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.