மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி சதவீதம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, மேலும் 3 சதவீதம் உயர்ந்து 53 சதவீதமாக மாறும். இந்த அறிவிப்பு 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், அரசுக்கு ஆண்டிற்கு ₹1,931 கோடி கூடுதல் செலவுகள் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது,














