ஜம்முவில் 5000 க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
ஜம்மு மாவட்டத்தில் தற்போது டெங்கு பரவல் பெரிதும் அதிகரித்துள்ளது. சுகாதார அதிகாரிகள் கூற்றுப்படி, 5,009 பேர் தற்போது டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 425 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 27,809 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது, இதில் 5,009 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். மேலும், பரவல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அதிகாரிகள், நோயின் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பொதுமக்கள் சுகாதார சீர்திருத்தங்களை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.














