இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் போதை பொருள் பறிமுதல் அதிகரிப்பு

March 11, 2023

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் போதை பொருள்கள் பறிமுதல் அதிகரித்துள்ளதாக ஐநா போதை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐநாவின் கண்காணிப்பு பிரிவான சர்வதேச போதை பொருள் கடத்தல் கட்டுப்பாடு வாரியம் வருடாந்திர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் தயாரிப்பதை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடத்தல் கும்பல்கள் ஆன்லைன் மற்றும் கடல் மார்க்கத்தில் இதனை பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் போதை பொருள்கள் […]

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் போதை பொருள்கள் பறிமுதல் அதிகரித்துள்ளதாக ஐநா போதை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐநாவின் கண்காணிப்பு பிரிவான சர்வதேச போதை பொருள் கடத்தல் கட்டுப்பாடு வாரியம் வருடாந்திர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் தயாரிப்பதை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடத்தல் கும்பல்கள் ஆன்லைன் மற்றும் கடல் மார்க்கத்தில் இதனை பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் போதை பொருள்கள் பறிமுதல் அதிகரித்துள்ளன. 2021ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளில் இந்தியாவில் இருந்து மட்டும் 364 கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் போதை மாத்திரை பயன்படுத்துவோர் அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி மற்றும் கடத்தலும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஏராளமான கெமிக்கல் மற்றும் மருந்து நிறுவனங்கள் உள்ளன. இதில் சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. சட்டவிரோத போதை மாத்திரைகள் தயாரிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu