மலேசியாவில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
அகில இந்திய அளவில், முதன்முறையாக கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி முதல் நாமக்கல் பகுதிகளில் இருந்து விமானம் மூலம் மலேசியா நாட்டிற்கு முட்டைகள் ஏற்றுமதி தொடங்கி உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் நாமக்கல் வல்சன் பரமேஸ்வரன் கூறுகையில், நாமக்கல் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 10 கண்டெய்னர் மூலம் 50 லட்சம் முட்டைகள் முதன் முதலாக மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த மாதம் மட்டும் 20 கண்டெய்னர் மூலம் 1 கோடி முட்டைகள் அனுப்பப்பட உள்ளது. பிப்ரவரி மாதம் இது 40 கண்டெய்னர்களாக உயரும் வாய்ப்புள்ளது என்றார்.