மாமல்லபுரத்தில் பிரான்ஸ் நாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு

மாமல்லபுரத்தில் பிரான்ஸ் நாட்டு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டு பயணிகள் விமானத்தில் வெளிநாட்டு சுற்றுலா செல்பவர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை முறைகள் அனைத்தும் நீக்கப்பட்டன. பிரான்ஸ் நாட்டில் தற்போது பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து மாமல்லபுரத்திற்கு பிரான்ஸ் நாட்டு பயணிகள் வரத்து தொடங்கி உள்ளது. மாமல்லபுரம் வருகை தரும் பிரான்ஸ் நாட்டினர் இங்குள்ள மீனவர் பகுதி கடற்கரை குடில்கள், விடுதிகள் மற்றும் ஒத்தவாடை தெருவில் அறைகள் எடுத்து […]

மாமல்லபுரத்தில் பிரான்ஸ் நாட்டு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டு பயணிகள் விமானத்தில் வெளிநாட்டு சுற்றுலா செல்பவர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை முறைகள் அனைத்தும் நீக்கப்பட்டன. பிரான்ஸ் நாட்டில் தற்போது பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து மாமல்லபுரத்திற்கு பிரான்ஸ் நாட்டு பயணிகள் வரத்து தொடங்கி உள்ளது. மாமல்லபுரம் வருகை தரும் பிரான்ஸ் நாட்டினர் இங்குள்ள மீனவர் பகுதி கடற்கரை குடில்கள், விடுதிகள் மற்றும் ஒத்தவாடை தெருவில் அறைகள் எடுத்து தங்கி உள்ளனர்.

கடற்கரை கோவில் ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் முன்பு பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள் குழு, குழுவாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்ததை காண முடிந்தது. பிரான்ஸ் நாட்டு பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டிகள் மாமல்லபுரம் சிற்பங்கள் பற்றி பிரெஞ்சு மொழியில் விளக்கி கூறினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu