சென்னையில் வீட்டு வாடகை சதவிகிதம் உயர்வு

March 23, 2024

சென்னையில் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் வீட்டு வாடகை 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சென்னையின் மையப்பகுதிகளை நோக்கி மக்கள் செல்வதால் வீடுகளின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் தேவை தொடர்ந்து இருக்கும் நிலையில் மாதவரம், கொளத்தூர் உள்ளிட்ட மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளிலும் தேவை அதிகரித்து வருகிறது. வாடகை உயர்விற்கு சொத்துவரி உயர்வு ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மேலும் முக்கிய பகுதிகளான நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை ஆர். […]

சென்னையில் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் வீட்டு வாடகை 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

சென்னையின் மையப்பகுதிகளை நோக்கி மக்கள் செல்வதால் வீடுகளின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் தேவை தொடர்ந்து இருக்கும் நிலையில் மாதவரம், கொளத்தூர் உள்ளிட்ட மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளிலும் தேவை அதிகரித்து வருகிறது. வாடகை உயர்விற்கு சொத்துவரி உயர்வு ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மேலும் முக்கிய பகுதிகளான நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை ஆர். ஏ புரம் போன்ற பகுதிகளில் வாடகை 75 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை உள்ளதாக தொழில் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மயிலாப்பூர் மந்தைவெளியின் பழைய பகுதிகளின் கட்டடங்களில் வசதிகள் குறைவாகவே இருந்தாலும் அங்கு 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளில் இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறைகள் கொண்ட குடியிருப்புகளுக்கு 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் மெட்ரோ ரயில் இணைப்பு, நிறைய வேலை வாய்ப்புகள், சமூக உள் கூட்டமைப்பு ஆகியவை மக்களை சென்னை நோக்கி நகர்த்துவதாகவும் அதனால் அப்பகுதிகளில் வாடகை தேவை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu