நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு

தமிழ்நாட்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரிப் கொள்முதல் பருவத்திற்கு கூடுதல் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக காரிப் 2024- 2025 நெல் கொள்முதல் பருவத்திற்கு ஆதார விலையுடன் ஊக்கத் தொகையும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் விவசாயிகளுக்கு காரிப் 2024 - 2025 பருவத்திற்கான நெல் கொள்முதல் 01-09-2024 முதல் மேற்கொள்ள மத்திய அரசை கேட்டுக் கொண்டதற்கு இணங்க இதற்கு […]

தமிழ்நாட்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரிப் கொள்முதல் பருவத்திற்கு கூடுதல் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக காரிப் 2024- 2025 நெல் கொள்முதல் பருவத்திற்கு ஆதார விலையுடன் ஊக்கத் தொகையும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் விவசாயிகளுக்கு காரிப் 2024 - 2025 பருவத்திற்கான நெல் கொள்முதல் 01-09-2024 முதல் மேற்கொள்ள மத்திய அரசை கேட்டுக் கொண்டதற்கு இணங்க இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு 2024 -2025 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார பிழையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2300 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2320 என்றும் நிர்ணயித்து உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 105 ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 130 ம் கூடுதல் ஊக்க தொகையாக தமிழ்நாடு அரசின் நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது அதன்படி சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2405 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2450 என்றும் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத்தொகை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu