கோடையில் வெயில் தாக்கத்தால் கண் நோய் பாதிப்பு அதிகரிப்பு

கோடைகாலம் தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் கண் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடங்கியதில் இருந்து கண் நோய்களுக்கான பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில் குறிப்பாக தமிழகம் முழுவதும் கண் அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் சென்னையில் கண் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கோடைகாலத்தில் உலர் விழி, புற ஊதா கதிர்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமை பாதிப்பு ஆகியவை அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. இவற்றை […]

கோடைகாலம் தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் கண் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கோடை காலம் தொடங்கியதில் இருந்து கண் நோய்களுக்கான பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில் குறிப்பாக தமிழகம் முழுவதும் கண் அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் சென்னையில் கண் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கோடைகாலத்தில் உலர் விழி, புற ஊதா கதிர்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமை பாதிப்பு ஆகியவை அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. இவற்றை சொட்டு மருந்துகள் மூலம் சிகிச்சை செய்து கொள்ளலாம். தற்போது இளம் சிவப்பு கண் நோய் எனப்படும் கண் அலர்ஜி ஏற்பட்டு வருகிறது. இது கண் இமைக்கு உள்ளே அமைந்திருக்கும் திசுவில் உண்டாகும் வீக்கத்தால் அலர்ஜி ஏற்படும் போது உருவாகிறது. இதனை அசுத்தமான கைகளால் சுத்தம் செய்யக் கூடாது. மேலும் கண் நோய்களை பாதுகாப்பதற்காக கண்களை காக்கும் கண்ணாடிகளை அணிந்து கொள்ளவும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான பானங்களை அருந்த வேண்டும் எனவும், செல்போன்கள், கம்ப்யூட்டர் திரைகளை தொடர்ந்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu