மத்திய அரசு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2024, 2025 கோடை கால சாகுபடிக்கான நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூபாய் 117 உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வவானது வேளாண் செலவு மற்றும் விலை ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பயிர்களுக்கான உற்பத்தி செலவைபோல் ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை கடைபிடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது இந்திய உணவு கழகத்திடம் தேவையானதை விட நான்கு மடங்கு அதிகமாக இருப்பதால் புதிய கொள்முதல் தேவை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது