ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்வு

September 16, 2022

தமிழகத்தில் ரசகுலா, குலாப் ஜாமுன் உள்ளிட்ட 17 இனிப்பு வகைகளின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் ஆவினில் பால் பொருட்களின் விலையை தொடர்ந்து இனிப்பு வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவினில் 125 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.50 ஆகவும், 100 கிராம் ரசகுல்லா விலை ரூ.45 ஆகவும், 100 கிராம் கோவாவின் விலை ரூ.50 ஆகவும், […]

தமிழகத்தில் ரசகுலா, குலாப் ஜாமுன் உள்ளிட்ட 17 இனிப்பு வகைகளின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

தமிழகத்தில் ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் ஆவினில் பால் பொருட்களின் விலையை தொடர்ந்து இனிப்பு வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவினில் 125 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.50 ஆகவும், 100 கிராம் ரசகுல்லா விலை ரூ.45 ஆகவும், 100 கிராம் கோவாவின் விலை ரூ.50 ஆகவும், 100 கிராம் டேட்ஸ் கோவாவின் விலை ரூ.60 ஆகவும், 1 கிலோ ஸ்வீட்லெஸ் கோவா விலை ரூ.600 ஆகவும், உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 100 கிராம் மில்க் பேடா ரூ.55 ஆகவும், 250 கிராம் மைசூர்பா விலைரூ.140 ஆகவும், 250 கிராம் பிரீமியம் மில்க் கேக் விலை ரூ.120 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu