கரும்பு கொள்முதல் விலை உயர்வு

February 22, 2024

கரும்பு கொள்முதல் விலை 8 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக மத்திய மந்திரி அறிவித்துள்ளார். வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரும்புக்கான கொள்முதல் விலை எட்டு சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 2024 - 2025 ஆம் நிதி ஆண்டுக்கான புதிய விலை உயர்வு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரவிருக்கிறது. தற்போதைய அறிவிப்பின்படி குவிண்டாலுக்கு ரூபாய் 315 […]

கரும்பு கொள்முதல் விலை 8 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக மத்திய மந்திரி அறிவித்துள்ளார்.

வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரும்புக்கான கொள்முதல் விலை எட்டு சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 2024 - 2025 ஆம் நிதி ஆண்டுக்கான புதிய விலை உயர்வு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரவிருக்கிறது. தற்போதைய அறிவிப்பின்படி குவிண்டாலுக்கு ரூபாய் 315 லிருந்து 340 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய மந்திரி கரும்பு சீசன் வரும் அக்டோபர் 1, 2024 அன்று துவங்குகிறது. அதன்படி அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30, 2025 ஆம் ஆண்டு வரை புதிய விலை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu