முட்டையின் கொள்முதல் விலை உயர்வு

முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ஒரு முட்டைக்கு ஐந்து பைசா உயர்த்தப்பட்டு ரூபாய் 5.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட இடங்களில் 1000 க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் மூலம் தினமும் சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் தினசரி விற்பனைக்காக […]

முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ஒரு முட்டைக்கு ஐந்து பைசா உயர்த்தப்பட்டு ரூபாய் 5.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட இடங்களில் 1000 க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் மூலம் தினமும் சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. என்.இ.சி.சி எனப்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு முட்டை விலையை அறிவிக்கும். அதனை பண்ணைடாலர்கள் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி கடந்த 26ம் தேதி 5.80 ஆக இருந்த முட்டை விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்து 29ஆம் தேதி 5.25 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu