ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு

உப்பின் விலை உயர்ந்துள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி,காஞ்சிரங்குடி, ஆனைகுடி, பள்ளமோர்க்குளம், வாலிநோக்கம், தேவிபட்டினம், கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி ,சம்பை, நதிப்பாலம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாவட்டங்களான புதுக்கோட்டை, திருச்சி,திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மழை இல்லாத காலங்களான பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை உப்பு உற்பத்தி செய்யும்  காலங்களாகும். கோடை மழையின் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உப்பின் […]

உப்பின் விலை உயர்ந்துள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி,காஞ்சிரங்குடி, ஆனைகுடி, பள்ளமோர்க்குளம், வாலிநோக்கம், தேவிபட்டினம், கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி ,சம்பை, நதிப்பாலம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாவட்டங்களான புதுக்கோட்டை, திருச்சி,திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மழை இல்லாத காலங்களான பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை உப்பு உற்பத்தி செய்யும்  காலங்களாகும். கோடை மழையின் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உப்பின் விலை கடும் சரிவை கண்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கத்தால் உப்பின் உற்பத்தி அதிகரித்து ஒரு டன் 3000 முதல் 4000 வரை விற்பனை செய்து வரப்படுகின்றது. இதனால் ராமநாதபுரத்தில் உள்ள உப்பு உற்பத்தியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu