மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் 67.95 லட்சம் ஓய்வுதியர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்ந்துள்ளது.