மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகள் தற்பொழுது 703 ரூபாய் விலையில் 14.2 கிலோ சிலிண்டரை பெற்று வருகின்றனர். இதில் பயணிகள் 603 ரூபாய் செலுத்தினால் போதுமானது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமாக உஜ்வாலா திட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 9.6 கோடி குடும்பங்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மந்திரி சபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 75 லட்சம் பேருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் மானியம் 200 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக தற்போது உயர்த்த பட்டிருக்கிறது.