சபரிமலையில் பக்தர்கள் வருகை தற்போது அதிகரித்து உள்ளதால் ஆன்லைன் முன்பதிவு நிறுத்தி வைக்க போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு ஆன்லைன் முன்பதிவு முறையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. பக்தர்கள் கூட்ட எரிசலில் சிக்காமல் தரிசனம் செய்ய, நேர அதிகரிப்பு வரிசை வளாகங்கள் மற்றும் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்த போதிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் சாமி தரிசனத்திற்காக வழங்கப்படும் உடனடி முன்பதிவு நிறுத்த வேண்டும் என போலீசார் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.