500 ரூபாய் கள்ள நோட்டு - 2023 ஆம் நிதி ஆண்டில் 14% உயர்வு

கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 14% உயர்ந்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. “2022 ஆம் நிதியாண்டில், 79669 எண்ணிக்கையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 2023 ஆம் நிதி ஆண்டில் 91110 எண்ணிக்கையில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 20 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் 8.4% உயர்ந்துள்ளது” - இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், மத்திய ரிசர்வ் வங்கியின் […]

கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 14% உயர்ந்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. “2022 ஆம் நிதியாண்டில், 79669 எண்ணிக்கையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 2023 ஆம் நிதி ஆண்டில் 91110 எண்ணிக்கையில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 20 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் 8.4% உயர்ந்துள்ளது” - இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை படி, 2000 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 13604 என்ற எண்ணிக்கையில் இருந்து, 9806 ஆக குறைந்துள்ளது. மேலும், 10 ரூபாய் மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, 2022 ல் 230971 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 2023 ஆம் நிதியாண்டில் 225769 கள்ள நோட்டுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது 2% குறைவாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu