மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1572 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து விநாடிக்கு 1,572 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று விநாடிக்கு 1,561 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை சற்று அதிகரித்து விநாடிக்கு 1,572 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் […]

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து விநாடிக்கு 1,572 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று விநாடிக்கு 1,561 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை சற்று அதிகரித்து விநாடிக்கு 1,572 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 102.75 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று மேலும் சரிந்து 102.73 அடியானது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu